கண் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
December 11, 2022
0
ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு அனைவரது கண்களுக்கும் ஓய்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், சில சிறிய உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகத் தேய்த்து சூடு ஆக்கிய பிறகு, கைகளை கண்களின் மேல் சில நொடிகள் வைக்கவும்.
பகலில் சில சமயங்களில் கண்களை முன்னும் பின்னும் திருப்ப வேண்டும். கணினி முன் அதிக வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும். கண் இமைகளை வேகமாக திறப்பதும் மூடுவதும் கூட உடற்பயிற்சிதான் என்கின்றனர் நிபுணர்கள்.
Tags