பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி மற்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி :
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் .அஸ்வின், வாழ்க்கை வழிகாட்டல் நிபுணர், தாராபுரம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அதற்கு தயார் படுத்திக் கொள்வது பற்றி உரையாற்றினார்.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் கட்டுமானத்துறை பேராசிரியர் முனைவர் G .S .திருஞானம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார் .
பேராசிரியர் J.முரளி சுப்பிரமணியன், எமரிட்டஸ் & ஆசிரியப் பயிற்சியாளர், குவியம் கல்வித் தர ஆலோசனை மையம், குளித்தலை அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் "எழுந்து பறக்க பழகுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் P .நந்தகுமார் ,தேசிய பயிற்சியாளர், ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல், இந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய வெற்றிக்கான ரகசியத்தை எடுத்துரைத்தார் .
பில்டர்ஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் S .கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் ஐஐடி ஓய்வு பெற்ற பேராசிரியர் G.ராமசாமி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பை பற்றிய முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு , தொழில் முனைவோர் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். முனைவர்S.ராதாகிருஷ்ணன்,இயக்குனர், SKITRAC கலந்து கொண்டு
மன மேலாண்மை பற்றிய சிறப்புரையாற்றினார்.
V .அங்கப்பா, மெகாடெக் அறிவியல் கருவிகள், மேலாளர் பயிற்சி மற்றும் மேம்பாடு, சாரதா ஸ்கில் அகாடமி, கோயம்புத்தூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் பயிற்சிகளை பற்றி கருத்துக்களை பரிமாறினார்.மாணவர்களுக்கு பொறியியல் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது. முனைவர் S .K .செந்தில் குமார்,ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் & யோக அறிவியல், ஒருங்கிணைப்பாளர் & பயிற்சியாளர்- ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஹார்ட்ஃபுல்னஸ் இன்ஸ்டிடியூட்.அவர்கள் பங்குபெற்ற மன அழுத்தம்தவிர்ப்பு பற்றிய பயிற்சியளித்தார். தியானம் செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் தியானம் பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாணவர்கள் உலகளாவிய மனித மதிப்புகள் பற்றிய தொகுப்புரை, கல்லூரியில் உள்ள கிளப் நடவடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் , திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களை ,போடறன் புட்ஸ் ,காங்கேயம் , ரியல் டெக் ஸிட்டேம்ஸ் , பெருந்துறை, வலசு மணி பார்ம் எக்யுப்மென்ட்ஸ்,சிவகிரி,ஸ்வாமி பீட்ஸ் சோழர் பவர் ஸ்டேஷன்,மூலனூர் ,சின்னம்மன் பெவேர்ஸ் ஆகிய தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காண்பிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் அறிவியல் மற்றும் மனிதநேய துறை தலைவர் முனைவர்
C .கார்த்திகேயன் மாணவர்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் C .வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மேற்கொண்டிருந்தார். காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் தலைவர் N . ராமலிங்கம் அவர்கள், செயலாளர் C. K . வெங்கடாச்சலம் , பொருளாளர் C .K . பாலசுப்ரமணியம் மற்றும் தாளாளர் S . ஆனந்த வடிவேல் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .