Type Here to Get Search Results !

கீழ் பவானி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தலை மாவட்ட ஆட்சித்தலைவர்கிருஷ்ணனுன்ணி தொடங்கி வைத்தார்

 கீழ் பவானி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தலை மாவட்ட ஆட்சித்தலைவர்கிருஷ்ணனுன்ணி  தொடங்கி வைத்தார்
பவானிசாகர் அணைக்கட்டு பகுதியில், மீன்வனம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பவானி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தலை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி தொடங்கி வைத்தார்; சேல் கெண்டை, கல்பாசு, ரோகு, கட்லா, மிருகால் போன்ற நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் இருப்பு செய்தார்.
முன்னதாக, கராச்சி கோரை மற்றும் சுஜ்ஜில் குட்டை ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
பட்டா கேட்டு மனு அளித்தனர். அருகில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் அமைந்துள்ள கிராம
ஊராட்சி சேவை மையத்தினை பார்வையிட்டார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் அப்பகுதிமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து தருகிறார்களா எனவும் கேட்டறிந்தார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.