ஈரோடு நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் மேட்டூர் சாலையில் தரணிதரன், பூபதி ஆகிய இருவருக்கு சொந்தமான செல்போன் கடை ஒன்று உள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இன்று காலை சுமார் 9 மணி அளவில் கடையின் ஊழியர்கள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
இது குறித்து ஈரோடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஈரோடு நகர காவல் துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் ,
நகர காவல் ஆய்வாளர் தேவிகா ராணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் வந்திருந்து ஆய்வு மேற்கொண்டு தடையங்களை சேகரித்தனர். (CCTV கொள்ளையர் கடையை கடையை பூட்டை உடைத்து கண்ணாடியை உடைக்கும் காட்சி)
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலோடு பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது..