அம்பேத்கரின் கருத்துக்கு எதிரான இந்துத்துவா சக்திகள் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதற்கு காவல்துறையில் உள்ள சில பொறுப்பற்ற அதிகாரிகளே காரணம் என்றும் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திராவிட விடுதலைக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அரசுக்கு வேண்டுகோள்.....
ஈரோடு மாவட்டம்
தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை முன்னிட்டு திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது....
அம்பேத்கர்கரின் கருத்துக்கு எதிரான இந்து சக்திகள் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதற்கு காவல்துறையில் உள்ள சில பொறுப்பற்ற அதிகாரிகளே காரணம் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும்
கோபிசெட்டிபாளையம் சார்பதிவாளரிடம்
தந்தை பெரியாரின் படத்தினை அப்புறப்படுத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் மீது வழக்கு பதியப்பட்டும் இது வரை கைது செய்யப்படவில்லை.
காவல்துறையினர் பாஜகவினர் மீது கைது செய்யப்படக்கூடிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தால் அந்த வகை குற்றவாளிகளை நாங்களே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாமா எனபது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கொளத்தூர் மணி தெரிவித்தார்