ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று சூரம்பட்டி நால் ரோடு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர்மனோகரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையான்,முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, பொன் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும், விலைவாசியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.