என்னடா வாழ்வு. என்னடா வாழ்க்கை. ஏன் படைத்தானோ இறைவன் என்னை. ஏன் இந்த நிலையில் வைத்தானோ என்னை..
December 04, 2022
0
என்னடா வாழ்வு.
என்னடா வாழ்க்கை.
ஏன் படைத்தானோ இறைவன் என்னை.
ஏன் இந்த நிலையில் வைத்தானோ என்னை..
என்று இறைவன் மேல் குறை சொல்லி குற்றம் சொல்லி வாழும் நமக்கு..
சற்று யோசித்தோமானால்..
புலப்படும்..
நேற்று மாற்றுத்திறனாளிகள் தினம் அந்த தினத்தன்று ஒரு நிகழ்வில் திருமகன் ஈவேரா அவர்களோடு கலந்த போது.
குழந்தைகளை பார்க்கிற போது அவர்கள் தனது நிலையை அறியாமல் இருக்கிறதை பார்க்கிறபோது...
இறைவனுடைய படைப்பிலே மிகச்சிறந்த படைப்பு மனித படைப்பு.
ஆக அந்தப் படைப்பை பெற்ற நாம் அதிலும் ஊனமோ. உடல் வளர்ச்சி குன்றியோ மூளை வளர்ச்சி குன்றியோ. இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தோட இருந்தோம் ஆனால் அதுவே ஆகச்சிறந்த இறைவன் நமக்கு தந்த அருட்கொடை.
இருந்த போதும் ஆசை என்ற ஒன்றை நாம் அதிகரித்துக் கொண்டு..
அடுத்தவன் வாழ்வதை ஏங்கிக் கொண்டு.
அவனுக்கு இல்லாதது நமக்கு இருக்கிறது இறைவன் நமக்கு தந்திருக்கிறான் என்பதை துளியும் கூட உணராமல் இருப்பதை மறந்து விட்டு இல்லாததை ஏங்குவதனாலே..
நிம்மதியற்ற வாழ்வு நிலையற்ற சிந்தனை வாழ்வின் மேல் வெறுப்பு .
ஆக நமக்குத் தந்த அருளை சிறப்பை எண்ணி ஆராய்ந்து அதை மேம்படுத்தி வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு..
இன்று கலந்து கொண்ட நிகழ்வில் நான் பார்த்தது போது இந்த குழந்தைகளுக்கு இந்த உலகம் என்னவென்றே தெரியாமல் இருக்கிறதை பார்க்கிற போது..
Tags