தாராபரம் குண்டு லெப்பை ஒலியுல்லா தர்ஹா சரீப்-தர்ஹாவின் பொதுமக்களின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின்
December 01, 2022
0
தாராபுரம்:
தாராபரம் குண்டு லெப்பை ஒலியுல்லா தர்ஹா சரீப்-தர்ஹாவின் பொதுமக்களின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் உருவம் சிசிடிவியில் பதிவாகி உள்ள காச்சிகளைவைத்து போலீஸ் வலைவீச்சு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள டி.காளிபாளையம் கரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வக்பு வாரியத்திற்கு
சொந்தமான மஹான் குண்டு லெப்பை ஒலியுல்லா தர்ஹா சரீப்-தர்ஹாவின் இரவு மர்ம நபர்கள் தர்ஹாவின் சீமை ஓட்டைப் பிரித்து உள்ளிருந்த பொதுமக்களின் காணிக்கை உண்டியலை உடைத்து. அதிலிருந்த பணம் மற்றும் சில்லரை காசுகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து டி.காளிபாளையம் ஜமாத்தார் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார். திருட்டுச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது .இதற்கு தொடர்புடைய நபர்கள் யாரேனும் உள்ளார்களா? அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் அப்பகுதியில் இருக்கின்றார்களா?
எனவும் மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள தர்ஹாவில் சீமை ஒட்டை பிரித்து உள்ளே இறங்கிய நபரின் யார்? அவரின் உருவத்தை வைத்து . அதற்கு பொருந்தும் படியான பழைய குற்றவாளிகள் உள்ளார்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தர்காவில் தொடர்ந்து 2,வது முறையாக திருடு போகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:தர்ஹாவில் உள்ள இறங்கிய குற்றவாளி தான் குதித்து.உள்ளே சென்றவுடன் சிசிடிவி கேமராவை திரும்பிய சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது.
Tags