Type Here to Get Search Results !

நல்லமங்காபாளையத்தில் நடத்தசுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் அரசு விழா

நல்லமங்காபாளையத்தில் நடத்த
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் அரசு விழா நடத்த வேண்டும்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவை  நடத்தநல்லமங்காபாளையத்தில் வேண்டும் என்று கலெக்டரிடம் மாவீரன் பொல்லான் பேரவையினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அரசு விழா அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் அரசியல் கட்சியினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:- இந்திய சுதந்திர போராட்டத்தில் தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரன் பொல்லான். அவரது நினைவு தினமான ஆடி மாதம் 1-ந் தேதி அரசு மரியாதையுடன் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி விழா நடைபெற்று வருகிறது. பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் ரூ.1 கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். நிலம் தேர்வு செய்ய வீட்டு வசதித்துறை அமைச்சர், கலெக்டரின் ஆலோசனையின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.

நிலம் தேர்வு செய்ய 2 தரப்பினரையும் அழைத்து அமைச்சர் சு.முத்துசாமி சுமூகமாக பேசி முடிவு செய்தார். அதன்படி பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் அருகே நல்லமங்காபாளையத்தில் நினைவு சின்னமும், வடுகபட்டி கிராமம் ஜெயராமபுரத்தில் நினைவு அரங்கமும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நல்லமங்காபாளையம் இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாவீரன் பொல்லான் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில் விழா நடத்தப்பட்டது. வருகிற 28-ந் தேதி பொல்லான் பிறந்தநாள் விழாவை அறச்சலூர் அருகே நல்லமங்காபாளையத்தில் நடத்த வேண்டும். மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில் நடத்தக்கூடாது. அனைத்து அரசியல் கட்சியினர் பொதுமக்கள் வந்து பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.