பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றம் மற்றும் தாமரை சேவை மையம் சார்பாக நடத்திய மருத்துவ முகாமை மாவட்டத் தலைவர் வேதானந்தம் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை ராயல் சரவணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு 10 நபர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் மண்டல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.