Type Here to Get Search Results !

பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் தரைதளம் அமைக்கும் பணியினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் 
ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் தரைதளம் அமைக்கும் பணியினை  அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அருள்மிகு சங்கமேஸ்வரர்
திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிமெண்ட் பூச்சு தரை மற்றும் பேவர் பிளாக் கல்தளம் ஆகியவற்றை அகற்றி விட்டு ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கும் பணியினை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .சு.முத்துசாமி  துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அறிவிப்பின்படி (2022-23), அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிமெண்ட் பூச்சு தரை மற்றும் பேவர் பிளாக் கல்தளம் ஆகியவற்றை அகற்றி விட்டு ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு சுமார் 23000 சதுர அடி பரப்பளவில் தரைதளம் அமைக்கும் பணியினை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  துவக்கி வைத்து பணிகளை விரைவாக முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சு.சுவாமிநாதன், மொ.அன்னக்கொடி, உதவி செயற்பொறியாளர்
காணீஸ்வரி, மாவட்ட
அறங்காவலர் குழுதலைவர்
எல்லப்பாளையம்.சிவக்குமார், 
ஈரோடு மாநகராட்சி துணை மேயர்
வெ.செல்வராஜ், பவானி நகராட்சி தலைவர் .சிந்தூரி, அரசு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.