80 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக வீடு கட்டுவதற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகை முழுவதையும் செலுத்திய 80 நபர்களுக்கு இன்று வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 80 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் செல்வராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ. பிரகாஷ், மண்டல தலைவர்கள் பழனிச்சாமி, சசிகுமார், பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, 46-வது வார்டு கவுன்சிலர் பிரவீனா சந்திரசேகர் உள்பட பாடல் கலந்து கொண்டனர்.