மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 7ம் தேதி தொடக்கம்
December 03, 2022
0
கல்வி கற்றல் என்கிற நிலையை தாண்டி மாணவ, மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறனை படைப்பாற்றல் மூலம் வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை படித்து வரும் மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், ஆடல், பாடல், , மொழித்திறன், மனப்பாடம், இசை வாசித்தல், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் தேர்வான மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். வட்டார அளவிலான போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ளதையடுத்து, மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் வருகின்ற 7ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Tags