ஈரோட்டில் ஈ.விகே.எஸ்.இளங்கோவன் 75 பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 75 வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வலம்புரி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு சர்க்கரைபொங்கல் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.எஸ்.பிரகாஷ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு ராஜேஷ் ராஜப்பா, மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் மூத்த வழக்கறிஞர் ஓஎம்ஆர் பழனிவேல், சம்பத் நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்