ஜெயலலிதாக்கு 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு அ.தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
December 05, 2022
0
ஈரோட்டில் ஜெயலலிதாக்கு 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு அ.தி.மு.க.வினர் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள எம்ஜிஆர் ,ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் பி சி ராமசாமி,
முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெயராஜ், ராமசாமி, முருகசேகர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, கங்காபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பொங்கி அண்ணன், எஸ் ஆர் ஜி மூர்த்தி, வீரப்பன் சத்திரம் ஜெயலலிதா பேரவை பகுதி இணைச் செயலாளர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், 15வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா சந்தோஷ் குமார், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், காவிரி முருகன், சூரிய சேகரன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags