ஈரோட்டில் அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
December 05, 2022
0
ஈரோட்டில் அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
சட்ட மேதை அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது...
அதன்படி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்...
அவரை தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..
Tags