ஈரோட்டில் சில்க் சுமிதா அவர்களுக்கு 63 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
December 03, 2022
0
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா 63 வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் அவரது ரசிகர் ஒருவர் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி உள்ளார் இது குறித்து ஈரோடு அகில்மேடு வீதியில் பேக்கரி வைத்துள்ள குமார் வயது 45 இவர் கூறியதாவது சிறு வயது முதல் நான் சில்க்ஸ்மிதாவின் ரசிகனாக உள்ளேன் அனைவரும் அவரை கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்த்து வருகின்றனர் ஆனால் நான் அவரின் மனிதநேயத்தையும் ஏழைகளுக்கு உதவும் பன்பை மட்டுமே பார்த்து அவர் மீது பற்று கொண்டு அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் நினைவாக பேக்கரி முழுவதும் சில்க் ஸ்மிதாவின் படங்கள் வைத்துள்ளேன் மேழும் வருடம் வருடம் எனது சொந்த செலவில் பேக்கரியில் அவரின் படங்களை வைத்து நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியும் . மற்றும் பிறந்தநாளில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கி 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வேஷ்டி சேலைகள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருட வருடம் தினசரி காலண்டர் அச்சடித்து பொது மக்களுக்கு வழங்கி வருகிறேன் எனது கடை வழியாக செல்லும் பொதுமக்கள் கடை முழுவதும் சில்க் ஸ்மிதா படங்கள் வைத்துள்ள எனது கடையை உள்ளே வந்து பார்த்து ஆச்சர்யமாக பார்த்துச் செல்வார்கள் எனது இந்த முயற்சிக்கு எனது மனைவியும் எனது இரு மகள்களும் உதவியாகவே உள்ளனர் என்று தெரிவித்தார்
Tags