அத்திகடவு - அவினாசி திட்டத்தில் முடிவுற்ற 600 குளங்களை நீர் நிரப்பும் பணி தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி இத்திட்ட ஆய்வு
அத்திகடவு - அவினாசி திட்டத்தில் முடிவுற்ற 600 குளங்களை நீர் நிரப்பும் பணி ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி இத்திட்ட ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அத்திகடவு - அவினாசி திட்டப்பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அதிகாரிகளுடன் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி , திமுக ஆட்சிக்கு வந்தவுடன் , அத்திகடவு - அவினாசி திட்டப்பணிகள் வேகமாக நடைபெறுகிறது.சிக்கல் இருந்த இடங்களில் விவசாயிகளுடன் பேசிய தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் , 106.8 கி.மீ தூரம் மெயின் பைப் லைனும் , 6 பம்மிங் ஸ்டேசன்பணிகளும் முழுமையாக முடிவுற்றுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தில் 1045 குளங்களுக்கு நீர் நிரப்ப 958 கி.மீ பைப் லைன் அமைக்கும் பணி முடித்துவிட்டதாகவும் , எனினும் 1045 குளங்களில் 600 குளங்களில் நீர் நிரப்ப தேவையான அனைத்து பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது என்றார். மீதியுள்ள 445 குளங்களில் நீர் நிரப்ப தேவையான பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றார். இத்திட்டத்தில் மேலும் குளங்கள் சேர்க்க வாய்ப்பு இல்லை என்ற அமைச்சர் முத்துசாமி , அத்திகடவு - அவினாசி திட்டத்தில் முடிவுற்ற பணிகளை வைத்து ஜனவரிக்குள் செயல்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
பேட்டி: முத்துசாமி வீட்டு வரிசை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்.