6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர சோதனை
December 04, 2022
0
6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர சோதனை
பாபர் மசூதி இடுப்பு தினம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை வெட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகனங்களை கண்காணித்து பயணிகள் உடைமைகளை சோதித்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாதித்தவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இன்று காலை ஈரோடு ரெயில்வே நுழைவாயில் பகுதியில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணியில் உடமை தீவிர பரிசோதனைப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டன. இதுபோல் வடமாநிலத்தவர்கள் விவரங்கள் சேரிக்கப்பட்டன.
Tags