Type Here to Get Search Results !

மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்; ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு :வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளருக்கும், அவரது மனைவிக்கும் தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வழக்குப்பதிவு ஈரோடு மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை கே.ஜி.நடேசன் (வயது 67) பணியாற்றினார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில், நடேசன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருந்ததும், அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரியையான அவரது மனைவி மல்லிகாவின் (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடேசன், அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரூ.1 கோடி அபராதம் நடேசன், மல்லிகா ஆகியோர் மீது ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக நடேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி அபராதம் விதித்தும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார். தலைமை பொறியாளராக பணியாற்றிய நடேசன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் நடந்த மினி மராத்தான் போட்டியில் 450 பேர் பங்கேற்றனர். மினி மராத்தான் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டு லிம்கா உலக சாதனை பதிவில் இடம் பெற திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோட்டில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா மினி மராத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோம சுந்தரம் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பரிசு ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறை ரோடு, காலிங்கராயன் இல்லம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியாக வ.உ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் உடல் தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் 450 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள். இதைத்தொடர்ந்து ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1960-க்கு ஏலம் சத்தியமங்கலம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1960-க்கும், முல்லை ரூ.560-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.35-க்கும், பட்டுப்பூ ரூ.47-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.130-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது ஈரோடு அரசு மருத்துவமனை நேற்று இரவு7மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் *நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று காலையில் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு அரசு மருத்துவமனை ஈரோடு அரசு மருத்துவமனை உள்ளிருப்பு போராட்டத்தை இரவில் துவக்கி உள்ளனர் ஈரோடு GH அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் மாலை 6 மணியில் இருந்து காலவரற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் தூய்மை பணியாளர்களின் பரிந்துரை ஒப்பந்தங்களும் தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் முதன்மை வேலை பார்ப்பவர்களும் பிஎம்எஸ் ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் மற்றும் உரிமைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பலகட்ட பேச்சு வார்த்தையின் பின் பேச்சு வார்த்தைக்கு வர வர இருந்தார்கள் ஆனால் வரவில்லை பல கட்ட பேச்சு வார்த்தையின் முடிவு எட்டாததால் தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல அடிப்படையிலும் இவர்கள் வேலை நி… ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேதபாறை நீர்த்தேக்கத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பெருமுகை கிராமத்தின் வழியே செல்லும் காட்டாற்று ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது....... இதன் காரணமாக காட்டாற்றின் மறுகரையில் வசிக்கும் இருபதுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வர மாற்றுப்பாதை இல்லாமல் தவிப்பு.... கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையினால் இப்பகுதியில் உள்ள வேதபாறை என்ற நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பி அங்கிருந்து வெள்ள நீர் காட்டாறுகளில் வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் இந்த காட்டாறுகள் செல்லும் பாதையின் இரு க… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சியில் சாலை ஓரம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குதள்ளுவண்டி இணை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி ஈரோடு மாநகராட்சி மேயர்நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் துணை மேயர் V. செல்வராஜ் மாமன்ற உறுப்பினர்கள் மண்டல தலைவர்கள் கலந்து கொண்டு வழங்கினர் தாராபுரம்: தாராபரம் குண்டு லெப்பை ஒலியுல்லா தர்ஹா சரீப்-தர்ஹாவின் பொதுமக்களின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் உருவம் சிசிடிவியில் பதிவாகி உள்ள காச்சிகளைவைத்து போலீஸ் வலைவீச்சு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள டி.காளிபாளையம் கரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான மஹான் குண்டு லெப்பை ஒலியுல்லா தர்ஹா சரீப்-தர்ஹாவின் இரவு மர்ம நபர்கள் தர்ஹாவின் சீமை ஓட்டைப் பிரித்து உள்ளிருந்த பொதுமக்களின் காணிக்கை உண்டியலை உடைத்து. அதிலிருந்த பணம் மற்றும் சில்லரை காசுகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து டி.காளிபாளையம் ஜமாத்தார் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார். திருட்டுச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது .இதற்கு தொடர்புடைய நபர்கள் ய… பட்டியல் இன மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமையில் வழக்கு பதிவு செய்யக களத்தில் .... தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மற்றும் PUCL அமைப்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் துடுப்பதி ஊராட்சி துடுப்பதி பாலக்கரை உள்ள அரசு ஆரம்ப பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுமார் 40ம் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகிறார்கள் இப்பள்ளிக்கு அருகே உள்ள இந்திரா நகர் ஆகிய ஊர்களை சார்ந்த பட்டியல் இன மக்கள் குழந்தைகள் பள்ளியில் பயின்றுவருகிறார்கள் இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்த ஒரே கழிப்பறை தான் உள்ளது மாணவிகள் பயன்படுத்தும் மற்றொரு கழிப்பறையினை அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் இங்கு பயிலும் பட்டியல் இன மாணவர்களில் 4 ஆம் வகுப்பு 5 வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான் இந்த கழிவற… 'யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நடைமுறை வழி' ஈரோடு நவ.29: இயற்கை மருத்துவமும் யோகாவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி என்று பிரபல மனநல மருத்துவர் டாக்டர் இஎஸ்எம் சரவணன் கூறினார். பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-ஆம் ஆண்டு வெள்ளை அங்கி வழங்கும் விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசிய அவர், “வாழ்க்கையில் நாம் பின்பற்றுவதுதான் இந்தக் கற்றலுக்கு அடிப்படை. தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும். இது மக்கள் ஆரோக்கியமாக வாழ உதவும் பாடமாகும். பொதுவாக ஒருவர் தினமும் அரை மணி நேரம் யோகா அல்லது மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். அதை நம் குழந்தைகள் கற்க உதவியாக இருக்கும். உணவு, உடற்பயிற்சி, உழைப்புஓய்வு மற்றும் தூக்கம் ஆகியவை வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள். உண்மையில், யோகா சிகிச்சை மன… சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்க விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் கலந்துகொண்டு, அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். ERODE- news30/11/22 mohansundaram தொழிலாளியை கொலை செய்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை ஈரோடு, டிச.1- ஈரோட்டில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகர் 8-வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சமி (27). மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி லட்சுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் அவரது கணவர் மணிகண்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி இருப்பதாக தகவ… தமிழின வேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொடுமுடி ஒன்றியம் கருங்கரடு கொள நல்லி கருமண்டம்பாளையம் கிராமத்தில் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில். உடன் ன் மாவட்ட செயலாளர் மயில்துரையன் மாநகர இளைஞரணி செயலாளர் நல்லசிவம் மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துசாமி. கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன் .ஒன்றிய செயலாளர் ரமேஷ்.ஒன்றிய பொருளாளர் தங்கபாண்டியன். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மதன்குமார் செயலாளர் தினேஷ் குமார். இளைஞரணி கவியரசு இணைசெயலாளர் கிளாம்பாடி பேரூர் கழக தலைவர் சரவண பாண்டியன் வேலு ரஞ்சித் சேகர் கலந்து கொண்டனர். எய்ட்ஸ்தினம் 2022 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஈரோடு உலக எய்ட்ஸ் தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு பாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்தானது "சமப்படுத்துதல்" என்பதாகும். ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஹெச். கிருஷ்ணானுண்ணி, தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி வாசகம் அடங்கிய பதாகையில் கையொப்பமிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நியூ இந்தியா @ 75 இயக்கம் தொடர்பாக எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய், தன்னார்வ இரத்த தானம் தலைப்புகளில் சுவரொ… ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்தணிக்கை மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்,இந்தஎலவமலை, மேட்டுநாகவம் பாளையம், பேரோடு மற்றும் பிச்சாண்டம்பாளையம் ஆகிய 6 கிராம ஆய்வில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் கதிரம்பட்டி, ஊராட்சி ஒன்றிய பொதுநிதிதிட்டம், 15வது நிதிக்குழு மான்ய திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிரு… News வரவில்லை படம் வரவில்லை இன்று... இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழ்த் திருவாளர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தலைமையில் ஜனவரி 29 கடலூரில் நடைபெறும் இந்து சனாதன தர்ம எழுச்சி மாநாடு தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநில செயலாளர் க.சி.முருகேசன் மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் அரச்சலூர்அருண் ராஜ் ஆகியோரை அவரது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்... இந்த ஆலோசனையில்எடுக்கப்பட்ட முடிவின்படி ஈரோடு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமதி சரஸ்வதி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் திருமதி கலைவாணி விஜயகுமார் தெற்கு மாவட்ட தலைவர் வேதாந்தம் பவானி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் திரு.K.C. கருப்பண்ணன் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் சக்தி மசாலா நிறுவன தலைவர் சாந்தி துரைசாமி பெருந்துறை சிப்காட் பகுதி தொழிலதிப…
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.