ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 450 போலீசார் பயணம்
December 04, 2022
0
கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 450 போலீசார் பயணம்
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 6 - ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீப விழா அன்று திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை செல்வார்கள். இந்நிலையில் திருவண்ணாமலையில் தீபத் திருவிழா அன்று பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுத படை பிரிவுகளைச் சேர்ந்த 450 போலீசார் கூடுதல் எஸ்.பி. கணேஸ்வரி தலைமையில் நேற்று காலை திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றனர். இவர்கள் அனைவரும் வரும் 7-ந் தேதி மாலை வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பின்னர் ஈரோடுக்கு திரும்ப உள்ளனர்.
Tags