தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்
December 13, 2022
0
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வரின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் தற்போது இடமளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்க்கொத்து வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்க்கொடுத்து வாழ்த்தினார். முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 35 அமைச்சர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சரும் தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
Tags