Type Here to Get Search Results !

30 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.75.6 லட்சம் மானியம்

30 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.75.6 லட்சம் மானியம்
ஈரோடு மாவட்டத்தில் 30 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு மனை மானியமாக ரூ.75.6 லட்சம் வழங்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு மாவட்ட பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சிவநாதன் கூறியதாவது:- பட்டு வளர்ப்பு விவசா யிகளை ஊக்கப்படுத்த வளர்ப்பு மனை மானியம், கருவிகள் என பல்வேறு திட்டங்களில் மானியம், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கு 1 முதல் 1.50 ஏக்கர் வளர்ப்பு மனை அமைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.1.20 லட்சம், மத்திய பகுதி திட்டத்தில் 2 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வளர்ப்பு மனை அமை த்துள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் வளர்ப்பு மனை மானியமாக வழங்கப்படுகிறது

இதன்படி நடப்பாண்டு பட்டு வளர்ப்பு சிறு விவசாயிகள் 8 பேருக்கு தலா ரூ.1.20 லட்சம், மத்திய பகுதி திட்டத்தில், 22 விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு ரூ.75.6 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானிய விலையில் பட்டு விவசாயி களுக்கு கருவி வழங்கும் திட்டத்தில் சில கருவிகள் வந்துவிட்டன. சில நாளில் மீதமுள்ள கருவிகளும் வந்ததும் விவசாயிகளுக்கு முழுமையாக கருவிகள் வழங்கப்படும். தற்போது பருவநிலை சீராக, இதமாக உள்ளதால் பட்டு வளர்ச்சியும், அறுவடையும் சிறப்பாக நடக்கிறது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு 100 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது 766 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் ஜனவரி மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என்பதால் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 420 ஏக்கரில் பட்டு விவசாயத்துக்கான மல்பெரி சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து 450 ஏக்கரில் புதிய விவசாயிகள் இணைந்துள்ளனர். குண்டடம், தாராபுரம் போன்ற பகுதிகளில் கூடுதலாக 60 ஏக்கரில் பரப்பை விரிவாக்கம் செய்துள்ளனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.