Type Here to Get Search Results !

பிறந்து 26 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார், சுகாதாரத்துறையினர் விசாரணை

பிறந்து 26 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார், சுகாதாரத்துறையினர் விசாரணை
பிறந்து 26 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார், சுகாதாரத்துறையினர் விசாரணை
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சுரேஷ், இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜான்சி ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 4-ந் தேதி சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தை நஞ்சினை குடித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை 8 நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் வைத்திருந்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றனர். வீட்டிற்கு சென்றதும் மீண்டும் குழந்தைக்கு சளி மற்றும் முச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு டாக்டரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை டாக்டர் டானிக் கொடுத்து கொடுக்க சொன்னார்.


இதற்கிடையே நேற்று ஜான்சிராணி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு கட்டிலில் படுக்க வைத்து விட்டு சமையல் செய்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து உடனடியாக தாண்டாம்பாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிறந்த 26 நாட்களே பெண் குழந்தை இறந்ததால் இது குறித்து சிவகிரி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில்தான் குழந்தை மரணத்துக்கான காரணம் தெரியவரும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.