ஈரோடு மண்டலம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத் தலைவர் மற்றும் இணைப்பதிவாளர் .சு.ராஜ்குமார் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 15.12.2022 முதல் 23.12.2022 வரை நேர்முகத் தேர்வுகள் வித்யா நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க திண்டல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அறிவிப்பு எண் 01/2022 நாள் 13.10.2022 இல் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிப்பில் வரிசை எண் 02 இல் தெரிவிக்கப்பட்ட உடற்தகுதிச்சான்றிதழ் நடைமுறைகளுக்கு மாற்றாக பின்வரும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், நேர்முகத்தேர்விற்கு வருகைபுரியும் போது, அதற்கான சான்றிதழ்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று, பணியில் சேரும்போது நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் படற்தகுதிச் சான்றிதழினைப் பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் / தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் / தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைஇவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இணைப்பதிவாளர்/தலைவர், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், ஈரோடு மாவட்டம்.