Type Here to Get Search Results !

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 23 (ஜோடிகளுக்கு) திருமணத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்து ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 23 (ஜோடிகளுக்கு) திருமணத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்து ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். ஈரோடு திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 23 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி 'தலைமையில், ஈரோடு மேயர் சு.நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமகன் ஈ.வெ.ரா (ஈரோடு கிழக்கு), .சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்து ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி தெரிவிக்கையில், மாநிலம் முழுவதும் இன்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் திருமண தம்பதியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஈரோடு இந்து சமயஅறநிலையத்துறை, இணை ஆணையர் மண்டலத்திலும் சட்டமன்ற அறிவிப்பு எண் 14-ன் படி 23 இணைகளுக்கு ஈரோடு, திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி கலை அரங்கில் திருமணமும். திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் மண்டபத்தில் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலவச திருமண விழாவில் பங்கேற்கும் இணைகளுக்கு 3 கிராம் தங்க திருமாங்கல்யம் மணமக்களுக்கான பட்டு வேட்டி. பட்டு சட்டை துண்டு. பட்டுசேலை. ரவிக்கை,பித்தளை குத்துவிளக்கு-2, சந்தனக்கிண்ணம், குங்குமசிமின், மைகோதி, பித்தளை பூஜை தட்டு, பூஜை மணி, போவினி-2, தாம்பூளத்தட்டு, 2 தட்டு, 2 சிறிய டம்ளர். அன்னக்கூடை, 2 பெரிய டம்சார், பால் காய்ச்சும் பாத்திரம், பாத்திரம், ஹாட்பாக்ஸ், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, போர்வை, காய்வடிக்கூடை, சில்வர் பால் பாத்திரம், கிரைண்டர். கேஸ் அடுப்பு. பெரிய சில்வர் அண்டா, பவானி ஜமக்காளம், மிக்சி, வெள்ளி மெட்டி. மைகோதி உள்ளிட்ட 59 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு இணை ஒன்றுக்கு ரூ.50,000/- என மொத்தம் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு இணைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 20 நபர்களுக்கு (03.12.2022) மாலை சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் இன்று (04.12.2022) காலை சிற்றுண்டி ரூ.4,00 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது மேலும் மணமக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று திருமணம் நடைபெற்ற 23 ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசையினை வழங்கி வாழ்த்துக்களை தொவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மேனகா, உதவி ஆணையர்கள் அன்னக்கொடி, சுவாமிநாதன், , இளையராஜா, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கஸ்தூரி, இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர்கள்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.