*ஈரோடு,சத்தியமங்கலம்
தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் ரூ.21.00கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்ட
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானி சாகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் ரூ.21.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்
நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தெரிவித்ததாவது
தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறுபான்மையினர் மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்நாடு, முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அங்குள்ள தமிழர்களை காப்பாற்றும் வகையில் தமிழகத்தில் 106 இடங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக முகாம்களை அமைத்து பாதுகாப்பான நிலையை உருவாக்கினார்கள்.
அதன் தெடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு கருதி அடிப்படை தேவையான அனைத்து வசதிகளுடன் தரமாக கட்டுவதற்காக ரூ.317.00 கோடியில் சுமார் 7000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கு அறிவித்தார்கள். அதன்படி, முதற்கட்டமாக 3500 வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தமிழகம் முழுவதும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 321 வீடுகள் 17.17 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அடிப்படை தேவைகளுக்காக ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வுமுகாம்களில் முதல் கட்டமாக 420 வீடுகள் 291.30 சதுர அடி கொண்ட 4 வீடுகள் கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு வீடு ஒன்றுக்கு ரூ.5.00 லட்சம் வீதம் 105 தொகுப்பு வீடுகள் ரூ.21.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமானப் பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும், முதலமைச்சர் தமிழகத்தில் கூடுதலாக 3500 வீடுகள் கட்டுவதற்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள், அதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர் நலன்கருதி மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாக வீடுகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் ஒன்றிணைந்து சிறப்புடன் தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர், இதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மதுபாலன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக துணை இயக்குநர் ரமேஷ், தேர்வுநிலை கண்காணிப்பாளர் புகழேந்தி, கண்காணிப்பாளர் அசோக், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.