ஈரோடு சக்தியோடு ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கும் ஸ்கேன் சீல்
மருத்துவமனை மீது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழுவிற்கு தொடர் புகார்கள் வந்ததையடுத்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மருத்துவமனையின் நோயாளிகள் விவரம் , மருந்துகளின் இருப்பு , ஸ்கேனின் விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையில் ஸ்கேன் மையத்திற்கு அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வருவது தெரியவந்துள்ளது..அண்மையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் இயங்கி வரும் கோகிலா சேகர் மருத்துவமனையை சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.