Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள1176 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல் - அமைச்சர் மு. க .ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து மனைக்களுக்கானகிரயப்பத்திரங்களையும் வழங்கினார்

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள
1176 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல் - அமைச்சர் மு. க .ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ஈரோடு டிசம்பர் 7
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழக முழுவதும் 15 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடந்தது இதை தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கினார். அதன்படி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பவானி பகுதியில் 492 வீடுகளும், பெருந்துறை பகுதியில் 204 வீடுகளும், மொடக்குறிச்சி பகுதியில் 96 வீடுகளும், கொடுமுடி பகுதியில் 276 வீடுகளும், சத்தியமங்கலம் பகுதியில் 108 வீடுகளும் என மொத்தம் 1176 வீடுகள் ரூ.101 கோடியே ஒரு லட்சம் செலவில் 
கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளையும் முதல் - அமைச்சர் மு. க .ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார் ஈரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி ஈரோடுமாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்
1176 வீடுகளில் 541 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 635 வீடுகள் விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.