Type Here to Get Search Results !

சத்தியமங்கலம் தாலுக்கா , புஞ்சை புளியம்பட்டி108 ஆம்புலன்ஸ் அழகான ஆண் குழந்தை பிறந்தது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா , புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ், இவருடைய மனைவி கலாமணி 20 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று மாலை 7 மணி அளவில் மணியளவில் பிரசவ வலியால் துடித்தார் அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக புளியம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

 அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

108 ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் பஸ் டிப்போ அருகே வந்தபோது கலாமணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தயாநிதி வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் அஜித்குமார் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது கலாமணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் வெ.அஜித்குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அ.தயாநிதி ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.