ஈரோடு மாவட்டம்,
சத்தியமங்கலம்
பவானி சாகர் அணையின் அருகே தமிழக அரசு 1080 ஏக்கரில் சிப்காட் -தொழிற்பேட்டை அமைக்கும் முடிவிற்கு
எதிர்ப்பு தெரிவித்து
கோபிசெட்டி பாளையம் கோட்டாச்சியரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஆட்சேபணை மனு அளித்தனர்...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகர் அணை தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அணையாகும்.
இந்த அணையின் நீர் தேங்கும் பரப்பளவுக்கு அருகில்
உள்ள சுங்ககாரன் பாளையம் ,
பனையம்பள்ளி ,
குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1080 ஏக்கர் கிணற்றுப் பாசன வேளாண் நிலத்தினை அப்பகுதி விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக தமிழக அரசு எடுத்து சிப்காட்- தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளது.
.
பவானி ஆற்றின் அருகாமையில்,
தொழிற்பேட்டை அமைத்தால்
தொழிற்சாலைகள் உமிழும் மாசடைந்த புகையினால் சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்று மண்டலம் விஷமாக்கபடவும்,
சுத்திகரிப்பின்றி வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும்
மனித வளம் மற்றும் தனிநபர் வருமானத்தில்
தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக திகழும் ஈரோடு மாவட்டத்தில்
இத்தகைய தொழில்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரியும்
பவானியாற்று குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களும்
கோபி ,சத்தி பவானிசாகர், பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான
விவசாயிகளும் கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
அதனைதொடர்த்து தடப்பள்ளி அரக்கண்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி பேசுகையில்
விவசாயிகளின் நிலங்களை பறித்து பவானி நதிநீரை மாசுபடுத்தும் இந்த தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிடக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் தொடர்ந்து இந்த சிப்காட் அமைக்கும் திட்டத்தினை அரசு முன்னெடுத்தால் கோபி, சத்தி பகுதிகளை சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்வோமென தெரிவித்தார்.