Type Here to Get Search Results !

கோபிஅருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் 1033 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் தடுப்பணையில் உள்ள அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபிஅருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் 1033 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் தடுப்பணையில் உள்ள அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் வெளியேறுகிறது இங்கு அருவி போல் தண்ணீர் கொட்டி செல்வதால் தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்


 இந்நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து கடந்த 14ஆம் தேதி 5800 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது இதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி தடுப்பணியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 15 தேதி 6764 கன அடியும் 16ஆம் தேதி 1492 கனஅடிக்கும் 17ஆம் தேதி 1793 18 ம் தேதி 2002 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. 19 மற்றும் 20ம் தேதி 300 கனஅடி உபரி நீர் வெளியேறியதால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் பவானிசாகர் அணை எந்த நேரமும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. தற்போது கொடிவேரி அணையில் 1033 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, 
பவானி ஆற்றில் பரிசல் இயக்க வேண்டாம் எனவும் குளிக்க வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.