Type Here to Get Search Results !

தண்ணீர் கடை மடை பகுதிக்கு மூன்று நாட்களுக்குள் சென்றடையும் மேலும் விவசாயம் தேவைக்கு ஏற்ப நீர்மிண்டும் திறப்பு கிழ்பவானி வாய்க்காலுக்கு 1000 கன அடி நீர் திறப்பு

தண்ணீர் கடை மடை பகுதிக்கு மூன்று நாட்களுக்குள் சென்றடையும் மேலும் விவசாயம் தேவைக்கு ஏற்ப நீர்மிண்டும் திறப்பு கிழ்பவானி வாய்க்காலுக்கு 1000 கன அடி நீர் திறப்பு
ஈரோடு, டிச.24-
பவானிசாகர் அணையின் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயின் 59ஆவது மைல் பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் தண்ணீர் புகுந்து 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கின. உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன்படி உடைந்த கட்டுமானங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமானம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக ஈடுபட்டனர். 
கால்வாயின் வலது புறத்தில் இருந்து மழை நீர் இடது புறம் செல்வதற்காக கால்வாயி்ன் அடியில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுரங்க பாலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே இந்த உடைப்பு ஏற்பட்டது. அந்த கட்டுமானங்களை முழுமையாக இடித்து அகற்றி விட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கரையின் இருபுறமும் 50 மீட்டர் நீளத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது. குழாய் பதித்து கான்கிரீட் அமைக்கப்பட்டது. பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ERODE-News 24/12/22 mohansundaram

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் கீழ் பவானி பாசன வாய்க்காலின் இரு  கறைகளிலும் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில் உடைபட்ட சரி செய்யப்பட்ட பகுதியில் நீர் வந்தடைந்ததை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்திகளை சந்தித்து அமைச்சர் கடந்த 10 நாட்களாக கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது திட்டமிட்டபடி இன்று பாசன வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டுள்ளது தற்பொழுது 1500 கன அடியாக திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு படிப்படியாக உயர்த்தி 2000 கன அடியாக உயர்த்தப்படும் திறக்கப்பட்டது தண்ணீர் கடை மடை பகுதிக்கு மூன்று நாட்களுக்குள் சென்றடையும் மேலும் விவசாயம் தேவைக்கு ஏற்ப நீர் திறப்பின் நாட்கள் நீட்டிக்கப்படும் என தெரிவித்தார்.

பேட்டி : முத்துசாமி - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.