கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொேரானா தொற்று குறைந்ததால் கொரோனா வார்டுகள் காலியானது. தற்போது கொேரானா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது, இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொேரானா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலும் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 படுக்கைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யூ. வார்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. இந்த வார்டை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேசன், உள்தங்கும் மருத்துவ அதிகாரி கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.