முத்துசாமிஆய்வு
ஈரோடு ,பெருந்துறை நந்தா கல்லூரி அருகே உள்ள கீழ்பவானி (எல்.பி.பி) பிரதான பாசனக் கால்வாயில் நடப்பு பருவத்தில் விளையும் பயிர்களுக்கும், அடுத்த பருவத்துக்கும் தேவையான தண்ணீர் வரும் வகையில் 10 நாட்களில் மராமத்து பணிகள் முடிக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை மாலை சேதமடைந்த கால்வாயை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: தொடர் மழை காரணமாக நேற்று மாலை கால்வாயின் இரு கரையோரங்களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், உடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, எல்பிபி அணையில் இருந்து நீர் திறப்பை 2000 முதல் 1000 கன அடியாக நீர்வளத்துறைகுறைத்தது. கரைஉடைப்புக்குப்பின், அணையிலிருந்துநீர்திறப்புமுழுமையாக நிறுத்தப்பட்டது. 10 நாட்களுக்குள் கால்வாயை சீரமைத்து விளைந்த பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, டிசம்பர் 9 முதல் தண்ணீர் விநியோகத்தை மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரைஉடைப்புக்குபின்னால் ஏதோ சதி இருப்பதாக உள்ள சில விவசாயிகளின் சந்தேகத்தை அவர் நிராகரித்தார். ஏற்கனவே அரசு அனுமதித்துள்ள ரூ.710 கோடி மதிப்பிலான கால்வாயின் நவீனமயமாக்கல் திட்டத்தை எதிர்த்தும், ஆதரவளித்தும் விவசாயிகள் 2 பிரிவுகளாக உள்ளனர். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வர, கடந்த மாதமும் 2 குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். பேச்சு வார்த்தைகள் தொடரும். மேலும், அருகில் உள்ள கிராமங்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் கால்வாய் நீர் புகுந்ததால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியர் பரிசீலிப்பார். இவ்வாறுஅவர் கூறினார். கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி விவசாய சங்க தலைவர்கள் மற்றும் நீர்வளத்துறை வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்