திருப்பூர் அடுத்த காங்கேயத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் காங்கேயம் அருகில் ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமி நகர் 2 வது வீதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் காங்கேயம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (47) என்பதும், அவர் பொது மக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. பின்னர் வெங்கடேசை கைது செய்து அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
ஆம்னி வேனில் சென்ற 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல் - ஒருவர்கைது திருப்பூர்
December 07, 2022
0
ஆம்னி வேனில் சென்ற 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல் - ஒருவர்கைது திருப்பூர்
Tags