ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 04.00 மணிக்கு 104.22 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் பவானிசாகர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து எதிர்பார்க்கப்படுவதால் பவானிசாகர் அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் வரும் நீர்வரத்தினை எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் வெள்ள நீராக திறந்துவிடப்படும் என்றும்
பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.