ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (FATIA) 3 வது கூட்டம் ஈரோடு சக்தி மசாலா மஹாலில் நடைபெற்றது.
November 25, 2022
0
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (FATIA) 3 வது கூட்டம் ஈரோடு சக்தி மசாலா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் V.K. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஈரோடு பைனான்ஸ் அசோசியேஷன் தலைவர் C. முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் FATIA செயலாளர் P. ரவிச்சந்திரன் பொருளாளர் R.முருகானந்தம், செயலாளர்கள் துணைச் செயலாளர்கள், காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர்களும், தொழில்துறையினரும் கலந்துகொண்டு சிறப்புத்தனர்கள்.
Tags