Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிக்கோயில் செல்லலாம். இப்பகுதியில் சுமார் 5000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். அனுதினமும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்க நொடிக்கு நொடி மிகவும் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர். ஏனென்றால் அடிக்கடி இந்த கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்கும் போது விபத்து ஏற்படுவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நோயாளிகள் சிகிச்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர ஊர்தியில் மருத்துவமனை செல்ல கூட இந்த கோவை சேலம் நெடுஞ்சாலை கடக்க குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் ஆகிறது என்பது மிகவும் மனவேதனை அளிப்பதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே விபத்துகள் நிகழாவண்ணம் தடுக்க இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் விரைந்து மேம்பாலம் அமைக்க வேண்டுமாறு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்னி ஆகியோர் இடம் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில் மாநில துணை செயலாளர் ம.கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.