Type Here to Get Search Results !

பாராளுமன்றதேர்தலுடன்சட்டமன்றத்துக்கும்தேர்தல்பாஜக துணைத் தலைவர் பேட்டி

ஈரோடு நவம்பர் 26: பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தும் சூழல் உருவாகி வருகிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே பி ராமலிங்கம் கூறினார் ஈரோடு பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா எனப்படும் பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். அவர்கூறியதாவது : பாஜக 2024 பாராளுமன்றம் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், 5 பூத்து கமிட்டிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் திமுக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு தில்லு செய்துவெற்றி பெற்றது 100 நாள் வேலை திட்டத்திலும் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகின்றன சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது தமிழுக்கு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வீணானது தமிழ் வளர்ந்த மொழி அதை உலகம் முழுவதும் பரப்பவே பிரதமர் முயற்சிக்கிறார் இதற்காக தமிழ் சங்கமும் காசியில் நடைபெறுகிறது சமஸ்கிருதம் நலிவுற்றுள்ளது எவ்வாறு நலிவுற்றவர்களுக்கு அதிக நிதி ஒதுக்குகிறோமோ அதே போல் அம் மொழி அழியாமல் இருக்க அதிக நிதி ஒதுக்கப்படுகிறது தமிழின் வளர்ச்சிக்கு நிதி தேவை என்ற திமுக அரசு மத்திய அரசை அணுகலாம் ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்டநிதி பல்வேறு திட்டங்களுக்கு முறையாக செலவிடவில்லை மத்திய அமைச்சர்கள் இது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறதுவேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்பதை நான் எம்எல்ஏ எம்எல்ஏவாக இருந்தபோது பலமுறை கோரினேன் திமுக இரண்டு வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்த போதிலும் அதில் வேளாண் வளர்ச்சிக்கு எந்த பெரிய திட்டமும் இல்லை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்காவை ஏற்படுத்தினார் ஆனால் திமுக ஆட்சியில் மத்திய அரசின் நிதியை கொண்டு வழக்கமாக விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை செய்கின்றனர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராகஇருந்தபோது வெள்ளம் பாதித்த பகுதிகளில் நஞ்சை பயிர்களுக்கு உடனடியாக ரூபாய் 30ஆயிரம் வழங்க கூறினார் அதே கோரிக்கையை தற்பொழுது அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பொருளாதாரத்தின் நலிவுற்ற முற்பட்ட வகுப்பினருக்கு 10 சத இட ஒதுக்கீட்டை திமுக அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே எதிர்க்கின்றன இந்தியா முழுவதும் அதற்கு ஆதரவுள்ளது அருகில் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர்காங்கிரஸ் ஆதரிக்கிறது பிராமணர்கள் மட்டுமல்லாமல் ரெட்டியார்கள் மற்றும் பல வகுப்புகளில் உள்ள உயர் ஜாதி ஏழைகள் இதனால் பலன் அடைவார்கள் இந்தி திணிப்பு என்பது வெற்று கூச்சல் 1960 இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் களம் கண்டனர் இப்போது உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாணவர்களோ அல்லது பிற அமைப்புகளோ அதில் கலந்து கொள்ளவில்லை கவர்னர் தேவை இல்லை என்றுஅண்ணா காலத்தில் இருந்து கூறப்படுகிறது கவர்னர் மசோதாக்களுக்கு கையெழித்திடவில்லை என்றால் அதற்கு உரிய காரணம் இருக்கும் அவரிடம் தான் அதற்கு விளக்கம் கேட்க வேண்டும் ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஆறு பேரை விடுதலை செய்ய கவர்னர் கையெழுத்திடவில்லை தீவிரவாதிகள் விடுதலையை அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன மின் கட்டணம் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசின் மீது திமுக பழிபோடுகிறது மக்கள் முட்டாள்கள் அல்ல யார் காரணம் என்பதை அவர்கள் அறிவார்கள் இவ்வாறு அவர் கூறினார் நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி கே சரஸ்வதி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம், நிர்வாகிகள்என்.பி.பழனிச்சாமி, சுதர்சன்,ஈஸ்வரமூர்த்தி, சிவகாமி மகேஸ்வரன், கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.