புன்செய் புளியம்பட்டியில் பல துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அப்துல் கலாம் விருதுகள் - நடிகர் தாமு வழங்கினார்
November 24, 2022
0
புன்செய் புளியம்பட்டி நவம்பர் 24 : ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ தேனு சாரீஸ் அண்ட் சில்க்ஸ், அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தனி திறமைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புஞ்சைப் புளியம்பட்டி கே ஜி மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் பி எஸ் அன்பு தலைமை தாங்கினார். அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி அன்பு முன்னிலை வகித்தார். விழாவில் பிரபல திரைப்பட நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சாதனை மாணவர்களுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருதுகளை பெற்றனர். மேலும் விழாவில் கடந்தாண்டு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புன்செய் புளியம்பட்டியில் 2000 மீட்டர் நீளம் உள்ள தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் செயலாளர் ஜெயகாந்தன் தலைவர் தருமராசு இயக்குனர்கள் லோகநாதன், சதீஷ்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்
Tags