Type Here to Get Search Results !

படம் விளக்கம்: தஞ்சையில் நடைபெற்ற சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா

படம் விளக்கம்: தஞ்சையில் நடைபெற்ற சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. வங்காளத்தில் விபின் சந்திரபாலும், பஞ்சாபில் லாலாலஜபதி ராயும், மராத்தியத்தில் பாலகங்காதர திலகரும் விடுதலைப் போராட்டத் தளபதிகளாக விளங்கியபோது தமிழ்நாட்டில் சிதம்பரனார் விடுதலைத் தளபதியாக திகழ்ந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்த் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பல தளங்களில் இந்நாட்டிற்கு உழைத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன், சிதம்பரனாரிடம் வேதாந்த சித்தாந்த மனமே வீசும் என்று கூறும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவரை ஒரு தத்துவ ஞானத் தலைவனாக நாட்டுக்கு அடையாளம் காட்டினார். பல்வேறு அறிய ஆற்றல்கள் வ.உ.சி யிடம் ஆமை போல் அடங்கி இருந்தாலும் அரசியல் புரட்சி மட்டுமே தலை தூக்கியது. அந்த புரட்சியானது மக்களை விடுதலை போராட்டத்தில் தீவிரமாக போராட வைத்தது. சிதம்பரம் பிள்ளையின் மேடை சொற்பொழிவு முழக்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட பிரிட்டிஷ் நீதிபதி ஃபின்ஹே அவருக்கு கடுமையான தண்டனை வழங்கினார். பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். உலகிலேயே பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவர், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாருக்கும் வழங்கப்படாத தண்டனைகள் இவருக்கு வழங்கப்பட்டது , 40 ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்ற ஒரே உலகத் தலைவர், கோவை சிறைச் சாலையில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருட்டு கொட்டடிக்குள் அடைக்கப்பட்டவர். சிறைச்சாலையில் கொடும் தண்டனையாக மாட்டிற்கு பதிலாக வவுசியை செக்கில் பூட்டி செக்கிழுத்ததால் செக்கிழுத்த சிதம்பரனார் என பாராட்டப்பட்டவர், தொழிற்சங்க தலைவர், வழக்கறிஞர், சுதந்திர போராட்ட வீரர் தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவர் என பல்வேறு புகழுக்குரிய வ .உ . சிதம்பரனாரின் 150 -ஆவது ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழாவினை ஒட்டி சிலம்பு செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனை பேரவை மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் க.அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் சி.நா.மி உபயதுல்லா, கப்பலோட்டிய தமிழன் நூலை வெளியிட, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் இரத்த வங்கியின் தலைவர், கவின் தஞ்சாவூரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ராதிகா மைக்கேல் ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். வ உ சி யின் வரலாறு பற்றி, அவருடைய போராட்டங்கள், தியாகங்கள் குறித்து மக்கள் சிந்தனை பேரவையின் நிறுவனர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை யாற்றினார். மக்கள் சிந்தனை பேரவையின் மாநிலதுணைத்தலைவர் ஜா.தினகரன் நன்றி கூறினார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.