வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்சு.முத்துசாமி முன்னிலையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ்
November 25, 2022
0
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்சு.முத்துசாமி முன்னிலையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் இரயில்வே நிர்வாகத்தால் வீடுகளை காலிசெய்ய வேண்டுமென வழங்கப்பட்ட அறிவிப்பு (நோட்டீசினை) தொடர்பாக கோரிக்கை மனுவினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாசன் வழங்கினார்கள். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உடன் இருந்தார்.
இந்நிகழ்வின்போது, தெரிவிக்கையில்,
ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் 1978- ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் 515 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5000- த்திற்கும் மேற்பட்டவர்கள் இரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அனைத்து மதத்தினருக்கான வழிபாட்டுத் தலங்கள், நியாய விலைக்கடைகள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இரயில்வே நிர்வாகத்தினர் மேற்கண்ட பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டுமென அறிவிப்பினை (நோட்டீஸ்) வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நானும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மேற்படி இடத்தில் வசிக்கும் பொதுமக்கள் காலிசெய்ய வலியுறுத்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை மனுக்களை அளித்திருந்தோம். அதன்
அடிப்படையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கோப்புகளை அனுப்பி உள்ளார்.
மேற்படி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்யும் பட்சத்தில் தொழில் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்படைவார்கள். மேலும், இந்த இடத்திற்கான மதிப்பீட்டுத் தொகையினையும் வழங்குவதற்கு தயாராக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில்கொண்டு இவர்களின் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இன்றைய தினம் (25.11.2022) சேலம் இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிய இரயில்வே அமைச்சரை மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.
மேலும், இது போன்ற இடங்களில் குடியிருப்பவர்களை பாதுகாப்பதில் நமக்கு மூழ பங்கு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், வீட்டுவசதி வாரியத்தால் வாடகை குடியிருப்பில் உள்ள 135 இடங்களில் 61 இடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடிக்கும் பணிகள் நிறைவு பெற்றபின், புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போன்று, சுயநிதி திட்டத்தின் மூலம் கட்டி விற்பனை செய்த பழுதடைந்த 12 இடங்களில் உள்ள வீடுகளை மீண்டும் கட்டித் தரவேண்டுமென கோரிக்கை வரப்பெற்றுள்ளது. வீட்டுவசதி வாரியத்திற்கு தார்மீக பொறுப்பு அடிப்படையில் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Tags