Type Here to Get Search Results !

தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்ஈரோடு நந்தாபொறியியல்கல்லூரி

தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்ஈரோடு நந்தாபொறியியல்கல்லூரி நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. துவக்க விழாவில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய சங்கத்தின் துணை இயக்குனர் உதயசங்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சண்முகன் தலைமை வகித்து பேசுகையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளிலிருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர் என்றார். இவர்கள் தங்களது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய படைப்புகளை பற்றி பேராசிரியர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். மாணவர்கள் சங்க செயலர் மீராசாம்ருதி வரவேற்றார். விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், கல்லூரி முதல்வர் ரெங்கராஜன், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் நிர்வாக அலுவலர் வேலுசாமி, துணை இயக்குநர் உதயசங்கர் பங்கேற்று புதிய படைப்புகளை சமர்பிக்கும் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவர்கள் சங்க செயலர் தமிழரசு கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.