Type Here to Get Search Results !

கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியில் திடீரென வீட்டிற்குள் புகுந்த குரங்கு ஒன்று

கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியில் திடீரென வீட்டிற்குள் புகுந்த குரங்கு ஒன்று அந்த வீட்டிற்கு உள்ளே இருந்தவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் இரண்டுமணி நேரம் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஈரோடு மாவட்டம் கோபிவருகே உள்ள நம்பியூர் பேருந்து நிலையம் பகுதியில் வினோத் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில் மதிய வேளையில் இவரின் வீட்டில் மனைவி குழத்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் இருந்தஙபோது திடீரென வீட்டிற்குள் குரங்கு ஒன்று புகுந்த்து.. அப்போது குரங்கை பார்த்த அச்சத்தில் வீட்டில் இருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு அறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அப்போது அந்த குரங்கு வீட்டுக்குள் இருந்த துணிமணிகளை தூக்கி எறிந்தும் அங்கிருந்த விலை உயர்ந்த LED டி.வி யின் மேல் ஏறி அமர்ந்தும் ரகளையில் ஈடுபட்டது மேலும் வினோத்தின் வீட்டின் கதவுகள் ஆட்கள் உள்ளே வந்தவுடன் தானாகவே மூடிகொள்ளும் வசதிகளுடன் இருந்தால் மூடியிருந்த கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேற முடியாமல் குரங்கு வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தது குரங்கு வீட்டிற்குள் புகுந்த தகவலை நம்பியூர் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தபோது அவர்களிடம் குரங்கை பிடிப்பதற்கான கருவிகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டதால் அதன் பிறகு டி. என்.பாளையம் வனத்துறையினருக்கு குரங்கு பற்றிய தகவல் கொடுத்தனர் ஆனால் வனத்துறையினரும சரிவர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து வினோத் வீட்டின் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து கதவை திறந்து விட்ட பிறகும் குரங்கு வெளியே செல்லாமல் வீட்டின் ஒவ்வொரு பொருட்களையும் கைகளில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தது இதே போல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்குள் ரகளை செய்த குரங்கு சற்று நேரத்திற்குப்பின் திறந்து விடப்பட்டிருந்த வாசல் கதவின் வழியாக வெளியே சென்றது அதனைத் தொடர்ந்து விட்டின் அறைகளில் அச்சத்துடன் பதுங்கியிருந்த குடும்பத்தினர் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். மூன்று கோபிசெட்டிபாளையம் செய்தி அனுப்பி உள்ளேன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.