Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சியில் மக்கா குப்பைகளை எரியூட்டும் இயந்திரம் :அமைச்சர் துவக்கி வைத்தார்

ஈரோடு மாநகராட்சியில் மக்கா குப்பைகளை எரியூட்டும் இயந்திரம் :அமைச்சர் துவக்கி வைத்தார் ஈரோடு நவம்பர் 28 தமிழகத்தில் முதல் முறையாக மக்கா குப்பைகளை எரியூட்டும் இயந்திரத்தை ஈரோடு மாநகராட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளரகளிடம் கூறியதாவது:ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த இயந்திரம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வைர பாளையம் குப்பை கிடங்கில் நிறுவப்பட்டுள்ளது இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது தமிழகத்தின் மாநகராட்சிகளில் முதல் முறையாக இக்கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது இதர மாநகராட்சிகளில் இதற்காக பணிகள் நடந்து வருகின்றன இக்கருவி ஒரு நாளைக்கு 25 டன் மக்கா குப்பைகளை எரியட்டும் இந்த சாம்பல் செங்கல் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இதே போன்று மற்றொரு இயந்திரம் ரூபாய் 1.70 கோடி செலவில் இதே இடத்தில் விரைவில் அமைக்கப்படும் ஒட்டுமொத்தமாக ஈரோடு மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 192 டன்குப்பைகள் அள்ளப் படுகின்றன அதில் 60 டன் மக்கும் குப்பை.அந்த குப்பைகள் இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது மாநகரில் எந்த இடத்திலும் குப்பை தேங்கியுள்ளது என்ற பிரச்சினை இதன் மூலம் தீர்க்கப்படும் மாநகராட்சியில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது அதில் சில இடங்களில் பிரச்சனை உள்ளது இதற்காக இன்று ஊராட்சி கோட்டை பகுதியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் விநியோக குழாய்களில் சில இடங்களில் பிரச்சினை இருப்பதால் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் மின்வாரியம் நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பார் மாநகராட்சியில் குப்பை வரி அதிகம் இருப்பதாக எந்த மாமன்ற உறுப்பினரும் என்னிடம் புகார் கூறவில்லை மாநகராட்சிகளின் துப்புரவு தொழிலாளர்கள் ச தனியார் நிறுவனங்கள் மூலம் பனி மூர்த்தது குறித்த அரசாணைக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவே பிரச்சனை முதல்வர் மற்றும் நகராட்சி துறை அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.