புதிய அரசாணைப்படி மாமன்றத்தின் அதிகாரத்தை குறைத்தால் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச்சு
November 28, 2022
0
ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளை கூறினார். அதனைத் தொடர்ந்து 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது வார்டு பிரச்சினை குறித்து பேச தொடங்கினர்.
அதிமுக சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசும்போது,
தற்போது புதிய அரசாணை கொண்டுகொண்டு வர முயற்சி நடப்பதாக நான் அறிகிறோம். அவர் புதிய அரசாணை அமல்படுத்தப்பட்டால் மாமன்றத்தின் அதிகாரம் குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேயர் மாநகராட்சி ஆணையாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மாநகராட்சிக்கு முன்பு இருந்தது போல் முழு அதிகாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும். 11-வது வார்டு 48 -வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை ஆனாலும் பாதாள சாக்கடைக்கான சேவை வரி கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதேபோல் மூன்றாம் மண்டல சுகாதார ஆய்வாளர் தன்னிச்சையாக செயல்படுகிறார். வார்டு உறுப்பினர்கள் சொல்வதை கேட்பதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஈ.பி.ரவி பேசும்போது,
தற்போது மாநகராட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் காலமா சில அருகே இரண்டு ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அறிகிறேன். ஆனால் இதற்கான டெபாசிட் தொகை அதிகமாக இருக்கிறது. ஏழை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை உடனடியாக மறுபரிசலனை செய்து டெபாசிட் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
43 - வார்டு உறுப்பினர் சபுராமா ஜாபர் சாதிக் பேசும்போது, எனது வார்டு நேதாஜி ரோடு, காரை வாய்க்கால் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் கழிவு நீர் சென்று வந்ததை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஓடை சுவர் கட்டும் போது கழிவு நீர் செல்வதை அடைத்து விட்டார்கள். இந்தப் பகுதியில் பாதாள சாக்கடையும் நடைமுறைக்கு வரவில்லை.கழிவு நீர் செல்லாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப்போல் நல்லா கவுண்டம்பாளையம் மாநகராட்சி பகுதிக்குள் வராது என்பதால் மாநகராட்சி நிதியில் செலவு செய்ய சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
ஈரோடு கனி மார்க்கெட் ஏல நடவடிக்கையை ஒத்திவைக்க காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை ஈரோடு மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கனி மார்க்கெட் ஜவுளி வணிகவளாககடைகளின் ஏலத்தைஒத்தி வைக்குமாறு மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஈபி ரவி கோரிக்கை விடுத்தார் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அவர் ஈரோடு மாநகராட்சி மேயரிடம் வழங்கிய மனு விபரம் கடந்த மாமன்ற கூட்டத்தில் கனி மார்க்கெட் வணிக வளாகம் மொத்த கடை எண்ணிக்கை மற்றும் அளவுகளை குறிப்பிட்டு ஏல நடவடிக்கை அனுமதி பெறப்பட்டது இந்நிலையில் 9 .12.2022 அன்று கனி மார்க்கெட் வணிக வளாக கடைகள் ஏலம் நடைபெறும் என்றும் ரூபாய் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வைப்புத் தொகை கடை எடுப்பவர்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது ஏலம் எடுப்பவர் 12 மாத வாடகை முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது இவ்வளவு பெரிய தொகையை சிறு ஜவுளி வியாபாரிகள் செலுத்த இயலாது எனவே தீர்மானத்தை நான் ஆட்சிபிக்கிறேன் மேலும் 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் பலர் வியாபாரம் செய்து வருகின்றனர் ஆனால் தற்பொழுது புதிய வளாகத்தில் கடையின் சதுர அடிக்கு அதிகமான வாடகை நிர்ணயம் செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய மாநில அரசு நிதி உதவியால் வளாகம் கட்டப்பட்டுள்ளது மாநகராட்சிபொது நிதியில் இருந்து கட்டப்படவில்லை ஆகவே வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் கடைகளை அளித்து அவர்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டுகிறேன் மேற்கண்ட நடவடிக்கை அரசிடமிருந்து அனுமதி பெற காலதாமதம் ஏற்படும் என்றால் அதுவரை ஏலநடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்
என்றார்.
தொடர்ந்து கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
Tags