காஞ்சிக்கோவில் அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது
November 25, 2022
0
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட எல்லீஸ்பேட்டை, பழையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (46). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்துள்ளார்.
செல்வி நேற்று கடையில் இருந்தபோது அதே பகுதியில் உள்ள மாதா கோவில் வீதியைச் சேர்ந்த அருள்தாஸ் (49), மதுபோதையில் செல்வியின் கடைக்கு வந்து கடனாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளார்.
செல்வி சிகரெட் தர மறுத்துள்ளார். இதையடுத்து, அருள்தாஸ் கடையினுள் நுழைந்து, அங்கிருந்த இருந்த கண்ணாடி ஜாடி தூக்கி கீழே போட்டு உடைத்தும், செல்வியை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறு செய்துள்ளார்.
இதனால், செல்வி அருகில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.
அப்போதும் விடாமல் அருள்தாஸ் விடாமல் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதையறிந்த அருள்தாஸ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து, செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோயில் போலீசார் வழங்குப் பதிவு செய்து அருள்தாஸை கைது செய்தனர்.பின்னர் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.
Tags