மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் மாரடைப்பால் மரணம்
November 28, 2022
0
மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் மாரடைப்பால் மரணம்
ஈரோடு அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அந்தியூர் அருகே உள்ள அத்தாணி அடுத்த கருவல்வாடிப்புதூரை சேர்ந்தவர் கே எஸ் சண்முகவேல். அதிமுக மாவட்ட கவுன்சிலரான இவருக்கு, அதிகாலை 3 மணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மாரடைப்பால் மரணம் அடைந்த மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags