கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பி இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது எதிர்பாராதவிதமாக தம்பி உயிரிழந்தார்
November 25, 2022
0
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பி இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது எதிர்பாராதவிதமாக தம்பி உயிரிழந்தார்
இந்த சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் அண்ணன் சஞ்சய் காந்தி என்பவரை பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோபி அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணநகரை சேர்ந்தவர் ராமசாமி இவருக்கு சஞ்சய்காந்தி மற்றும் நாகராஜ் என்ற திருமணமான இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராமசாமியின் மகன்கள் இருவரும் தங்களது தொழில் காரணமாக வெளியூர்களில் வசித்து வந்தனர்
ராமசாமியும் அவரது மனைவியும் பூர்வீக வீட்டில் தனியே வசித்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமசாமியின் இளைய மகன் நாகராஜ் வெளியூரிலிருந்து தனது தந்தை வீட்டிற்கே குடி வந்து சொந்தமாக ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டும் தொழில் செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் ராமசாமியின் மூத்த மகன் சஞ்சீவ் காந்தி தனது தம்பி நாகராஜ் தனது தந்தையின் பூர்வீக வீட்டில் குடியிருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரிடம் அடிக்கடி சண்டையிட்டும் அவரது தந்தையிடம் தனக்கு வீடு கட்ட இடம் தர வேண்டுமென்றும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வெளியூரில் குடியிருந்த சஞ்சீவ் காந்தி வழக்கம்போல தனது தந்தை வீட்டிற்கு வந்து அங்கிருந்த தனது தம்பியிடம் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அண்ணன் தம்பி இருவருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவரும் சண்டையிட்டபடியே வீட்டிற்கு வெளியே இருந்து ரோட்டிற்கு வந்து கட்டிப்பிடித்து உருண்டு ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கிக கொண்டனர்.
அப்போது ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ள தம்பி நாகராஜ் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அண்ணன் தம்பி சண்டையிட்டுக்கொள்ளும் செய்தியறிந்த பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு ராமசாமியின் இளைய மகன் நாகராஜ் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கோபி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற போது அங்குள்ள மருத்துவர்கள் நாகராஜ் ஏற்கனவே உயிழந்த்தாக கூறிய பின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின் நாகராஜின் அண்ணன் சஞ்சீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோபிசெட்டிபாளையம்
கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியில் திடீரென வீட்டிற்குள் புகுந்த குரங்கு ஒன்று
அந்த வீட்டிற்கு உள்ளே இருந்தவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் இரண்டுமணி நேரம் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஈரோடு மாவட்டம் கோபிவருகே உள்ள நம்பியூர் பேருந்து நிலையம் பகுதியில் வினோத் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இந்நிலையில் மதிய வேளையில் இவரின் வீட்டில் மனைவி குழத்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் இருந்தஙபோது திடீரென வீட்டிற்குள் குரங்கு ஒன்று புகுந்த்து..
அப்போது குரங்கை பார்த்த அச்சத்தில் வீட்டில் இருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு அறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
அப்போது அந்த குரங்கு வீட்டுக்குள் இருந்த துணிமணிகளை தூக்கி எறிந்தும்
அங்கிருந்த விலை உயர்ந்த LED டி.வி யின் மேல் ஏறி அமர்ந…
மூன்று கோபிசெட்டிபாளையம் செய்தி அனுப்பி உள்ளேன்
Tags